உள்ளடக்கத்துக்குச் செல்

சமாரியம்(III) அயோடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமாரியம்(III) அயோடேட்டு
இனங்காட்டிகள்
14732-17-3 நீரிலி Y
56491-70-4 ஒற்றைநீரேற்று Y
56491-69-1 இருநீரேற்று Y
EC number 238-790-6
InChI
  • InChI=1S/3HIO3.Sm/c3*2-1(3)4;/h3*(H,2,3,4);/q;;;+3/p-3
    Key: TVUBRBGHFDEZNV-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 44145917
  • [O-]I(=O)=O.[O-]I(=O)=O.[O-]I(=O)=O.[Sm+3]
பண்புகள்
Sm(IO3)3
வாய்ப்பாட்டு எடை 675.07
தோற்றம் மஞ்சள் நிறப் படிகங்கள் (இருநீரேற்று)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சமாரியம்(III) அயோடேட்டு (Samarium(III) iodate) என்பது Sm(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

[தொகு]

சமாரியம்(III) அயோடேட்டு ஒற்றைநீரேற்றை, சமாரியம்(III) நைட்ரேட்டுடன் கொதிக்கும் நீரில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் அயோடேட்டை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பெறலாம்.[2] இதன் இருநீரேற்றை சமாரியம்(III) குளோரைடு, அயோடின் பெண்டாக்சைடு மற்றும் நீரில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் பெர் அயோடேட்டு ஆகியவற்றைச் சேற்த்து 180 ° செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலம் பெறலாம்.[1]

பண்புகள்

[தொகு]

சமாரியம்(III) அயோடேட்டு பின்வருமாறு சிதைவடைகிறது.:[2]

7 Sm(IO3)3 → Sm5(IO6)3 + Sm2O3 + 9 I2 + 21 O2

சமாரியம்(III) அயோடேட்டு 200 °செல்சியசு வெப்பநிலையில் அயோடின் பெண்டாக்சைடு மற்றும் மாலிப்டினம் மூவாக்சைடுடன் நீர்வெப்ப வினைக்கு உட்பட்டு Sm(MoO2)(IO3)4(OH).[3] சேர்மத்தைக் கொடுக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Pan, Chun-Yang; Mai, Hai-Deng; Chen, Wu-Zhou; Zhao, Feng-Hua; Yang, Hong-Mei (Feb 2014). "The Synthesis, Structure, and Tunable Emission Spectra of A New Phosphor Sm(IO 3 ) 3 ·2H 2 O" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 640 (2): 429–433. doi:10.1002/zaac.201300432. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.201300432. 
  2. 2.0 2.1 Ghosh, B. P.; Nag, K. (Jul 1985). "Thermal and dielectric properties of rare earth iodates" (in en). Journal of Materials Science 20 (7): 2335–2344. doi:10.1007/BF00556063. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2461. Bibcode: 1985JMatS..20.2335G. http://link.springer.com/10.1007/BF00556063. 
  3. Shehee, Thomas C.; Sykora, Richard E.; Ok, Kang M.; Halasyamani, P. Shiv; Albrecht-Schmitt, Thomas E. (2003-01-01). "Hydrothermal Preparation, Structures, and NLO Properties of the Rare Earth Molybdenyl Iodates, RE (MoO 2 )(IO 3 ) 4 (OH) [ RE = Nd, Sm, Eu"] (in en). Inorganic Chemistry 42 (2): 457–462. doi:10.1021/ic025992j. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:12693227. https://pubs.acs.org/doi/10.1021/ic025992j. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்(III)_அயோடேட்டு&oldid=4109814" இலிருந்து மீள்விக்கப்பட்டது