சமாரியம்(II) அயோடைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சமாரியம் டையையோடைடு
| |
இனங்காட்டிகள் | |
32248-43-4 | |
ChemSpider | 125002 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 141689 |
| |
பண்புகள் | |
SmI2 | |
வாய்ப்பாட்டு எடை | 404.16 கி/மோல் |
தோற்றம் | பச்சை நிற திண்மம் |
உருகுநிலை | 520 °C (968 °F; 793 K) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சமாரியம்(II) குளோரைடு சமாரியம்(II) புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சமாரியம்(III) அயோடைடு யூரோப்பியம்(II) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சமாரியம்(II) அயோடைடு (Samarium(II) iodide) என்பது SmI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படும்போது இச்சேர்மத்தின் கரைசல் ககன்சு வினையாக்கி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. சமாரியம்(II) அயோடைடும் அதன் கரைசலும் பச்சை நிறத்தில் உள்ளன. எலக்ட்ரான் ஒடுக்க முகவராக கரிமவேதியியலில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
கட்டமைப்பு
[தொகு]உலோக மையங்கள் முகம் மூடிய எண்முக வடிவத்துடன் கூடிய ஏழு ஒருங்கிணைப்புகள் கொண்டுள்ளன [1].
ஈதர் கூட்டுவிளை பொருள்களில் சமாரியம் அதேபோல ஏழு ஒருங்கிணைப்புகளுடன் ஐந்து ஈதர் மற்றும் இரண்டு விளிம்பு நிலை அயோடைடு ஈந்தணைவிகளை கொண்டுள்ளது [2].
தயாரிப்பு
[தொகு]சமாரியம் உலோகத்துடன் டையையோடோ மெத்தேன் அல்லது டையையோடோ எத்தேன் சேர்த்து வினைபுரியச் செய்து சமாரியம்(II) அயோடைடு அளவியல் அளவுகளில் எளிதாக தயாரிக்கப்படுகிறது [3]. இந்த வழியில் தயாரிக்கப்படும் போது சமாரியம்(II) அயோடைடின் கரைசல்கள் பெரும்பாலும் கனிம வேதியியல் வினையாக்கியாக சுத்திகரிக்கப்படாமலேயே பயன்படுத்தப்படுகிறது.
-
()
.
சமாரியம்(III) அயோடைடை உயர் வெப்பநிலையில் சிதைவுக்கு உட்படுத்தி கரைசலற்ற திண்ம சமாரியம்(II) அயோடைடு தயாரிக்கப்படுகிறது[4][5][6].
வினைகள்
[தொகு]சமாரியம்(II) அயோடைடு ஒரு வலிமையான ஒடுக்கும் முகவராகும். உதாரணமாக இது தண்ணீரை அதிவிரைவாக ஐதரசனாக ஒடுக்கம் அடையச் செய்கிறது. டெட்ரா ஐதரோ பியூரானிலுள்ள 0.1 மோலார் கரைசல் நிலையில் அடர் நீலம் நிறத்துடன் வர்த்தக ரீதியாக கிடைக்கிறது.
கரிம வேதியியல்
[தொகு]கார்பன் – கார்பன் பிணைப்பு உருவாக்கத்திற்கான ஒரு வினையாக்கியாக சமாரியம்(II) அயோடைடு பயன்படுகிறது. ஒரு கீட்டோனும் ஓர் ஆல்க்கைல் அயோடைடும் சேர்ந்து ஈடுபடும் பார்பியர் வினையில் மூவிணைய ஆல்ககால் உருவாகும் வினையை இதற்கு உதாரணமாகக் கூறலாம் :[7].
- R1I + R2COR3 → R1R2C(OH)R3
டெட்ரா ஐதரோபியூரானில் உள்ள சமாரியம்(II) அயோடைடும் NiI2 முன்னிலையும் குறிப்பிட்ட இவ்வினைக்கான வினை நிபந்தனைகளாகும். எசுத்தர்களும் சமாரியம்(II) அயோடைடுடன் இதே முறையில் வினைபுரிகின்றன. வினையில் இரண்டு ஆல்க்கைல் குழுக்களை இது சேர்க்கிறது. ஆனால் ஆல்டிகைடுகள் உடன் விளைபொருட்களைக் கொடுக்கின்றன. வினை குளிர்ந்த நிலையில் 5 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் மிகவும் வசதியாகவும் அதி விரைவாகவும் நிகழ்கிறது. சமாரியம்(II) அயோடைடு ஒரு சக்திவாய்ந்த ஒற்றை-எலக்ட்ரான் ஒடுக்கும் முகவராகக் கருதப்பட்டாலும், இது செயல்பாட்டுக் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க ஒரு வேதியியல் தெரிவுத்திறனை காட்டுகிறது. எசுத்தர்கள் கீட்டோன்கள், அமைடுகள், ஆல்டிகைடுகள் போன்ற கார்பனைல் கொண்டுள்ள பல்வேறு வகையான வேதி வினைக்குழுக்களிடையே சல்போன்களும் சல்பாக்சைடுகளும் சல்பைடுகளாக ஒடுக்கப்படுகின்றன. சல்போன்கள் மற்றும் சல்பாக்சைடுகளுடன் ஒப்பிடும்போது கார்போனைல்களுடன் இது மெதுவாக ஈடுபடும் வினை காரணமாக இருக்கலாம். மேலும் சமாரியம்(II) அயோடைடைப் பயன்படுத்தி ஆலசனேற்றப்பட்ட ஐதரோகார்பன்களை அதனுடன் தொடர்புடைய ஐதரோகார்பன் சேர்மமாக மாற்ற முடியும். மேலும் டெட்ரா ஐதரோபியூரானிலுள்ள சமாரியம்(II) அயோடைடைடின் அடர் நீல நிறம் வினை ஏற்பட்டவுடன் வெளிர் மஞ்சள் நிறமாக மாறுவதை கண்காணிக்க முடியும். பார்பியர் வினை கலவையுடன் தொடர்பு கொண்டவுடன் இந்த அடர் நிறம் உடனடியாக மறைந்துவிடும் என்பதை படம் காட்டுகிறது. நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலம் சேர்க்கப்படுவதால் சமாரியம் நீரிய Sm3+ அயனியாக வெளியேறுகிறது. கார்பனைல் சேர்மங்கள் எளிய ஆல்க்கீன்களுடன் சேர்க்கப்பட்டு ஐந்து, ஆறு அல்லது எட்டு உறுப்பு வளையங்களாக மாற்றப்படுகின்றது [8]. டோசில் எனப்படும் தொலுயீன் சல்போனைல் குழுக்கள் என் – டோசிலமைடிலிருந்து கிட்டத்தட்ட உடனடியாக நீக்கம் செய்யப்படுகின்றன. ஓர் இணை காரத்துடன் சமாரியம்(II) அயோடைடைடு இங்கு பயன்படுத்தப்படுகிறது. அசிரிடீன் போன்ற உணர் அமீன்களை தயாரிப்பதில் இவ்வினை உபயோகமுள்ளதாக கருதப்படுகிறது:[9]
மார்க்கோ-லாம் ஆக்சிசனேற்ற நீக்க வினையில் SmI2 சேர்மத்தின் முன்னிலையில் ஓர் ஆல்ககால் அவற்றின் தொலுவேட்டு எசுத்தர்களை ஒடுக்குவதன் வழியாக உடனடியாக ஆக்சிசனேற்ற நீக்கம் செய்யப்படுகிறது.
SmI2 சேர்மத்தின் பயன்பாடுகள் மீளாய்வு செய்யப்படுகின்றன.[10][11][12] The book "Organic Synthesis Using Samarium Diiodide" published in 2009 gives a detailed overview of reactions mediated by SmI2.[13].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ William J. Evans; Tammy S. Gummersheimer; Joseph W. Ziller (1995). "Coordination Chemistry of Samarium Diiodide with Ethers Including the Crystal Structure of Tetrahydrofuran-Solvated Samarium Diiodide, SmI2(THF)5". J. Am. Chem. Soc. 117 (35): 8999–9002. doi:10.1021/ja00140a016.
- ↑ P. Girard, J. L. Namy and H. B. Kagan (1980). "Divalent Lanthanide Derivatives in Organic Synthesis. 1. Mild Preparation of SmI2 and YbI2 and Their Use as Reducing or Coupling Agents". J. Am. Chem. Soc. 102 (8): 2693–2698. doi:10.1021/ja00528a029.
- ↑ G. Jantsch, N. Skalla: "Zur Kenntnis der Halogenide der seltenen Erden. IV. – Über Samarium(II)jodid und den thermischen Abbau des Samarium(III)jodids", Zeitschrift für Allgemeine und Anorganische Chemie, 1930, 193, 391–405; எஆசு:10.1002/zaac.19301930132.
- ↑ G. Jantsch: "Thermischer Abbau von seltenen Erd(III)halogeniden", Die Naturwissenschaften, 1930, 18 (7), 155–155; எஆசு:10.1007/BF01501667.
- ↑ Gmelins Handbuch der anorganischen Chemie, System Nr. 39, Band C 6, p. 192–194.
- ↑ Machrouhi, Fouzia; Hamann, Béatrice; Namy, Jean-Louis; Kagan, Henri B. (1996). "Improved Reactivity of Diiodosamarium by Catalysis with Transition Metal Salts". Synlett 1996 (7): 633–634. doi:10.1055/s-1996-5547. https://archive.org/details/sim_synlett_1996-07_7/page/633.
- ↑ Molander, G. A.; McKiie, J. A. (1992). "Samarium(II) iodide-induced reductive cyclization of unactivated olefinic ketones. Sequential radical cyclization/intermolecular nucleophilic addition and substitution reactions". J. Org. Chem. 57 (11): 3132–3139. doi:10.1021/jo00037a033.
- ↑ Ankner, Tobias; Göran Hilmersson (2009). "Instantaneous Deprotection of Tosylamides and Esters with SmI2/Amine/Water". Organic Letters (American Chemical Society) 11 (3): 503–506. doi:10.1021/ol802243d. பப்மெட்:19123840.
- ↑ Patrick G. Steel (2001). "Recent developments in lanthanide mediated organic synthesis". J. Chem. Soc., Perkin Trans. 1 (21): 2727–2751. doi:10.1039/a908189e.
- ↑ Molander, G. A.; Harris, C. R. (1996). "Sequencing Reactions with Samarium(II) Iodide". Chem. Rev. 96 (1): 307–338. doi:10.1021/cr950019y. பப்மெட்:11848755.
- ↑ K. C. Nicolaou; Shelby P. Ellery; Jason S. Chen (2009). "Samarium Diiodide Mediated Reactions in Total Synthesis". Angew. Chem. Int. Ed. 48 (39): 7140–7165. doi:10.1002/anie.200902151. பப்மெட்:19714695.
- ↑ Procter, David J.; Flowers,II, Robert A.; Skydstrup, Troels (2009). Organic Synthesis Using Samarium Diiodide. Royal Society of Chemistry. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84755-110-8.