உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஃபினியம் நான்கையோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஃபினியம் நான்கையோடைடு
இனங்காட்டிகள்
13777-23-6
பண்புகள்
HfI4
வாய்ப்பாட்டு எடை 686.11[1]
தோற்றம் சிவப்பு-ஆரஞ்சு[1]
அடர்த்தி 5.60 கி/செ.மீ3[1]
உருகுநிலை 449 °C (840 °F; 722 K)[1]
கொதிநிலை 394 °C (741 °F; 667 K)[1] (பதங்கமாகிரது)
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்ரைச்சரிவு, mS40
புறவெளித் தொகுதி C2/c, No. 15[2]
Lattice constant a = 1.1787 நா.மீ, b = 1.1801 நா.மீ, c = 1.2905 நா.மீ
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஆஃபினியம் நான்கையோடைடு (Hafnium tetraiodide) என்பது HfI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சிவப்பும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் உள்ள இச்சேர்மம் ஈரத்தால் பாதிக்கப்படக் கூடியதாகவும் பதங்கமாகும் திண்மமாகவும் காணப்படுகிறது. ஆஃபினியம் மற்றும் அதிக அளவிலான அயோடின் கலந்த கலவையைச் சூடுபடுத்துவதால் ஆஃபினியம் நான்கையோடைடு உருவாகிறது. ஆஃபினியம் உலோகம் தயாரிக்கும் படிகப் பட்டை செயல்முறையில் இது இடைநிலை விளைபொருளாக விளைகிறது.

எண்முக ஒருங்கிணைப்பு வடிவத்தை இச்சேர்மத்தில் உள்ள ஆஃபினியம் மையங்கள் ஏற்கின்றன. பல்வேறு ஈரிணை உலோக ஆலைடுகள் போல இச்சேர்மமும் பலபடியின் தன்மைகளை வெளிப்படுத்துகிறது. ஈரிணை எண்முகத் துணை அலகுகளை விளிம்புகளில் பகிர்ந்து கொண்டுள்ள சங்கிலிகளால் ஆன ஒரு பரிமானப் பலபடியாக இது காணப்படுகிறது. HfCl4 சேர்மமும் இத்தலைமைப் பண்புக் கூறின் அடிப்படையில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஃபினியத்துடன் பாலமிடாத அயோடைடு ஈந்தணைவிகள் பாலமிட்ட அயோடின் ஈந்தனைவிகளை விட குறுகிய பிணைப்பு நீளம் கொண்டவையாக உள்ளன[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.
  2. 2.0 2.1 Krebs, B.; Sinram, D. (1980). "Hafniumtetrajodid HfI4: Struktur und eigenschaften. Ein neuer AB4-strukturtyp". Journal of the Less Common Metals 76: 7. doi:10.1016/0022-5088(80)90005-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஃபினியம்_நான்கையோடைடு&oldid=3384741" இலிருந்து மீள்விக்கப்பட்டது