இட்ரியம் அயோடைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மூவயோடோ இட்ரியம், இட்ரியம் மூவயோடைடு,[1] இட்ரியம்(3+) மூவயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
13470-38-7 | |
ChemSpider | 75345 |
EC number | 236-737-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83510 |
| |
UNII | IWJ2Y80D1J |
பண்புகள் | |
YI 3 | |
வாய்ப்பாட்டு எடை | 469.6193 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
உருகுநிலை | 1,000 °C (1,830 °F; 1,270 K) |
கொதிநிலை | 1,310 °C (2,390 °F; 1,580 K) |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இட்ரியம் அயோடைடு (Yttrium iodide) என்பது YI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்ரியமும் ஐதரயோடிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[2][3] நிறமற்ற படிகங்களாக உருவாகும் இது தண்ணீரில் கரையும்.
தயாரிப்பு
[தொகு]இட்ரியத்துடன் அயோடினைச் சேர்த்து மந்தவாயுச் சூழலில் சூடுபடுத்தினால் இட்ரியம் அயோடைடு கிடைக்கும்.
இட்ரியம் ஆக்சைடுடன் அமோனியம் அயோடைடு சேர்த்து சூடுபடுத்தினாலும் இட்ரியம் அயோடைடு கிடைக்கும்:
இட்ரியம் ஆக்சைடு அல்லது இட்ரியம் ஐதராக்சைடை ஐதரயோடிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்வதன் மூலமும் இட்ரியம் அயோடைடைத் தயாரிக்கலாம்.
இயற்பியல் பண்புகள்
[தொகு]இட்ரியம் அயோடைடு நிறமற்ற செதில் போன்ற படிகங்களாக உருவாகிறது. BiI3 கட்டமைப்பின் வகையை இதன் படிக அமைப்பும் கொண்டிருக்கிறது.[4]
தண்ணீர் மற்றும் எத்தனாலில் நன்றாக கரைகிறது. ஈரெத்தில் ஈதரில் கரையாது.
மூன்று மற்றும் அறுநீரேற்றுகளாகவும் இட்ரியம் அயோடைடு தோன்றுகிறது.[5]
பயன்
[தொகு]தாழ் வெப்பநிலைகளில் இட்ரியம் பேரியம் தாமிர ஆக்சைடு மீக்கடத்தி வேதிப் பொருட்களை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக இட்ரியம் அயோடைடு பயன்படுத்தப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "yttrium triiodide" (in ஆங்கிலம்). webbook.nist.gov. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
- ↑ Quarterly Metallurgical Progress Report (in ஆங்கிலம்). United States Atomic Energy Commission, Technical Information Service Extension. June 1960. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
- ↑ "Yttrium Iodide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
- ↑ Jongen, L.; Meyer, G. (1 August 2005). "Yttrium triiodide, YI3" (in en). Acta Crystallographica Section E 61 (8): i151–i152. doi:10.1107/S1600536805019847. பன்னாட்டுத் தர தொடர் எண்:1600-5368. http://scripts.iucr.org/cgi-bin/paper?S1600536805019847. பார்த்த நாள்: 2 November 2021.
- ↑ Emeleus, H.J.; Sharpe, Alan G. (1981). Advances in Inorganic Chemistry and Radiochemistry. Academic Press. p. 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-023624-9.
- ↑ "Yttrium(III) iodide". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.