டைபாசுபரசு டெட்ரா அயோடைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைபாசுபரசு டெட்ரா அயோடைடு
| |
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டெட்ரா அயோடோபாசுபேன் | |
வேறு பெயர்கள்
பாசுபரசு(II) அயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
13455-00-0 | |
EC number | 236-646-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83484 |
| |
பண்புகள் | |
P2I4 | |
வாய்ப்பாட்டு எடை | 569.57 கி/மோல் |
தோற்றம் | ஆரஞ்சுநிற படிகத் திண்மம் |
உருகுநிலை | 125.5 °C (257.9 °F; 398.6 K) |
கொதிநிலை | சிதையும் |
சிதையும் | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | C |
R-சொற்றொடர்கள் | R14, R34, R37 |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | டைபாசுபரசு டெட்ரா புளோரைடு டைபாசுபரசு டெட்ரா குளோரைடு டைபாசுபரசு டெட்ரா புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஈரார்சனிக் நான்கையோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டைபாசுபரசு டெட்ரா அயோடைடு (Diphosphorus tetraiodide) என்பது P2I4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆரஞ்சு நிறத்தில் ஒரு படிகத்திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கரிம வேதியியலில் ஓரு ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. பாசுபரசு +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படும் பாசுபரசு சேர்மத்திற்கு இதுவோர் அரிய உதாரணமாகும். பாசுபரசின் சார் ஆலைடு என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. டைபாசுபரசு டெட்ரா ஆலைடுகளில் மிகவும் அதிக நிலைப்புத்தன்மை கொண்டது டைபாசுபரசு டெட்ரா அயோடைடு ஆகும்[1].
தயாரிப்பு மற்றும் கட்டமைப்பு
[தொகு]உலர் டையெத்தில் ஈதரிலுள்ள பாசுபரசு டிரை அயோடைடு விகிதச்சம்மாதலின்றி சிதைவு அடைவதால் டைபாசுபரசு டெட்ரா அயோடைடு உருவாகிறது.
- 2 PI3 → P2I4 + I2
பாசுபரசு முக்குளோரைடுடன் பொட்டாசியம் அயோடைடு சேர்த்து நீரற்ற நிபந்தனையில் சூடுபடுத்துவதாலும் இதைத் தயாரிக்க முடியும் [2].
2.230 Å என்ற பிணைப்பு நீளம் கொண்ட ஒரு P-P பிணைப்பைக் கொண்ட நேர்மாற்று மைய இடக்குழுச் சீர்மை கட்டமைப்பை டைபாசுபரசு டெட்ரா அயோடைடு ஏற்கிறது [3]
கனிம வேதியியல்
[தொகு]புரோமினுடன் டைபாசுபரசு டெட்ரா அயோடைடு வினைபுரிந்து PI3−xBrx கலவையாக உருவாகிறது. கந்தகத்துடன் வினைபுரியும்போது டைபாசுபரசு டெட்ரா அயோடைடு ஆக்சிகரணம் செய்யப்பட்டு P2S2I4 சேர்மமாக உருவாகி P-P பிணைப்பை தக்க வைத்துக் கொள்கிறது.[1]
கரிம வேதியியல்
[தொகு]கரிமத் தொகுப்பு வினைகளில் டைபாசுபரசு டெட்ரா அயோடைடு முக்கியமாக ஓர் ஆக்சிசன் நீக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.[4] அசிட்டால் மற்றும் கீட்டால்களை காப்புநீக்கம் செய்து ஆல்டிகைடு மற்றும் கீட்டோன்களாக மாற்றவும், எப்பாக்சைடுகளை ஆல்க்கீன்களாக மாற்றவும், ஆல்டாக்சைம்களை நைட்ரைல்களாக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. மேலும், 2-அமினோ ஆல்ககால்களை அசிரிடீன்களாக வளையமாக்கவும் இது பயன்படுகிறது.[5] α,β-நிறைவுறா கார்பாக்சிலிக் அமிலங்களை α,β-நிறைவுறா புரோமைடுகளாக மாற்றவும் இது பயன்படுகிறது.[6] மேலே கூறப்பட்டுள்ளபடி பெர்த்தோலெட்டு 1855 ஆம் ஆண்டு [4] டைபாசுபரசு டெட்ரா அயோடைடை குன் விண்டெர்சிடீன் வினையில் கிளைக்காலை ஆல்க்கீனாக்கலில் பயன்படுத்தினார் [7].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ H. Suzuki; T. Fuchita; A. Iwasa; T. Mishina (December 1978). "Diphosphorus Tetraiodide as a Reagent for Converting Epoxides into Olefins, and Aldoximes into Nitriles under Mild Conditions". Synthesis 1978 (12): 905–908. doi:10.1055/s-1978-24936. https://archive.org/details/sim_synthesis_1978-12_12/page/905.
- ↑ Z. Žák, M. Černík "Diphosphorus tetraiodide at 120 K" Acta Crystallographica Section C 1996, vol. C52, pp. 290-1. எஆசு:10.1107/S0108270195012510
- ↑ 4.0 4.1 Alain Krief, Vikas N. Telvekar "Diphosphorus Tetraiodide" Encyclopedia for Reagents in Organic Synthesis 2009. எஆசு:10.1002/047084289X.rd448.pub2
- ↑ H. Suzuki; H. Tani (1984). "A mild cyclization of 2-aminoalcohols to aziridines using diphosphorus tetraiodide". Chemistry Letters 13 (12): 2129–2130. doi:10.1246/cl.1984.2129.
- ↑ Vikas N. Telvekar; Somsundaram N. Chettiar (June 2007). "A novel system for decarboxylative bromination". Tetrahedron Letters 48 (26): 4529–4532. doi:10.1016/j.tetlet.2007.04.137.
- ↑ Richard Kuhn, Alfred Winterstein (1928). "Über konjugierte Doppelbindungen I. Synthese von Diphenyl-poly-enen". Helvetica Chimica Acta 11 (1): 87–116. doi:10.1002/hlca.19280110107.