உள்ளடக்கத்துக்குச் செல்

துத்தநாக அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துத்தநாக அயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
துத்தநாக அயோடைடு
வேறு பெயர்கள்
துத்தநாக(II)அயோடைடு
இனங்காட்டிகள்
10139-47-6 Y
ChemSpider 59657 Y
InChI
  • InChI=1S/2HI.Zn/h2*1H;/q;;+2/p-2 Y
    Key: UAYWVJHJZHQCIE-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2HI.Zn/h2*1H;/q;;+2/p-2
    Key: UAYWVJHJZHQCIE-NUQVWONBAB
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66278
  • I[Zn]I
பண்புகள்
ZnI2
வாய்ப்பாட்டு எடை 319.22 கி/மோல்
தோற்றம் வெண்ணிறத் திடம்
அடர்த்தி 4.74 கி/செமீ3
உருகுநிலை 446 °C
கொதிநிலை 1150 °C decomp.
450 கி/100மிலீ (20 °C)
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம், tI96
புறவெளித் தொகுதி I41/acd, No. 142
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தீப்பற்றும் வெப்பநிலை 625 °C (1,157 °F; 898 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் துத்தநாக புளோரைடு
துத்தநாக குளோரைடு
துத்தநாக புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் காட்மியம் அயோடைடு
Mercury(I) iodide
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

துத்தநாக அயோடைடு (Zinc iodide) என்பது துத்தநாகமும் அயோடினும் சேர்ந்த ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு ZnI2. நீரற்ற துத்தநாக அயோடைடு வெண்மை நிறத்திலும் சுற்றுச் சூழலில் உள்ள நீரை ஈர்த்துக் கொள்ளும் தன்மையும் கொண்டதாக உள்ளது. துத்தநாகம் மற்றும் அயோடின் ஆகியன மீள்கொதிக்கும் ஈதரின்[1] முன்னிலையில் அல்லது நீர்த்த கரைசலில் நேரடியாக வினைபுரிந்து [2] துத்தநாக அயோடைடை கொடுக்கின்றன.

Zn + I2→ ZnI2

1150°C இல் துத்தநாக அயோடைடு ஆவி துத்தநாகம் மற்றும் அயோடினாக தனித்துப் பிரிகிறது. நீர்த்த கரைசலில் எண்முக Zn(H2O)62+, [ZnI(H2O)5]+ மற்றும் நான்முக ZnI2(H2O)2, ZnI3(H2O) and ZnI42− முதலானவை கண்டறியப்பட்டுள்ளன[3].

படிக துத்தநாக அயோடைடின் மூலக்கூறு அமைப்பு வழக்கத்திற்கு மாறானது. வெள்ளை நிற துத்தநாக அணுக்கள் துத்தநாகக் குளோரைடில் உள்ளது போலவே நான்முக வடிவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இணைந்த நான்கு நான்முகிகள் குழு தங்களுக்குள் மூன்று முனைகளைப் பகிர்ந்து கொண்டு சிறப்பு நான்முகி அமைப்பை ஏற்படுத்துகின்றன. (Zn4I10) அவை தங்கள் முனைகள் மூலம் இணைந்து முப்பரிமாண வடிவம்[4] பெறுகிறது. இந்தச் சிறப்பு நான்முகி அமைப்பு பாஸ்பரசு பென்டொக்சைடு (P4O10) இன் அமைப்பைப் போலவே உள்ளது.[4] வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை முன்மொழிவின்படி துத்தநாகம் அயோடின் இவற்றிற்கிடையேயான பிணைப்பு நீளம் 238 pm[4] கொண்டு மூலக்கூறு துத்தநாக அயோடைடு நேர்கோட்டு அமைப்புடன் உள்ளது.

பயன்கள்

[தொகு]
  • தொழிற்துறை கதிரியக்க வரைவியலில் துத்தநாக அயோடைடு எக்ஸ் கதிர்கள் புகாத ஊடுறுவியாக முழுமை கெடாமல் சேதம் மற்றும் கலப்பு வேறுபாடுகளை அறிந்து மேம்படுத்துதலில் பயன்படுத்தப்படுகிறது[5][6].
  • மீள மின்னேற்றம் செய்யத்தக்க நீர்த்த துத்தநாக ஆலசன் மின்கலத்தைப் பற்றி அமெரிக்க காப்புரிமை 4109065 [7] இவ்வாறு விவரிக்கிறது. இம் மின்கலத்தில் உள்ள மின்பகு கரைசலில் துத்தநாக உப்பு பயன்படுத்தப் படுகிறது. துத்தநாக் புரோமைடு, துத்தநாக அயோடைடு மற்றும் இவற்றின் கலவை இவற்றிலிருந்துதான் உப்பு தேர்ந்தெடுக்கப்படுகிறது. நேர்மின் முனை, எதிர்மின் முனை ஆகிய இரண்டு முனைகளிலும் இக்கரைசலே பயன்படுத்தப்படுகிறது.
  • துத்தநாக அயோடைடு ஒசுமியம் நாலொட்சைட்டுடன் இணைந்து மின்னணு நுண்ணோக்கியியலில் துணைபுரியும் கறையாகப் பயன்படுகிறது[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Eagleson, M. (1994). Concise Encyclopedia Chemistry. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-011451-8.
  2. DeMeo, S. (1995). "Synthesis and Decomposition of Zinc Iodide: Model Reactions for Investigating Chemical Change in the Introductory Laboratory". Journal of Chemical Education 72 (9): 836. doi:10.1021/ed072p836. https://archive.org/details/sim_journal-of-chemical-education_1995-09_72_9/page/836. 
  3. Wakita, H.; Johansson, G.; Sandström, M.; Goggin, P. L.; Ohtaki, H. (1991). "Structure determination of zinc iodide complexes formed in aqueous solution". Journal of Solution Chemistry 20 (7): 643–668. doi:10.1007/BF00650714. 
  4. 4.0 4.1 4.2 Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry (5th ed.). Oxford Science Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6.
  5. Baker, A.; Dutton, S.; Kelly, D., ed. (2004). Composite Materials for Aircraft Structures (2nd ed.). AIAA (American Institute of Aeronautics & Astronautics). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56347-540-5.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  6. Ezrin, M. (1996). Plastics Failure Guide. Hanser Gardner Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56990-184-8.
  7. US patent 4109065, Will, F. G.; Secor, F. W., "Rechargeable aqueous zinc-halogen cell", issued 1978-08-22, assigned to General Electric 
  8. Hayat, M. A. (2000). Principles and Techniques of Electron Microscopy: Biological Applications (4th ed.). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-63287-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தநாக_அயோடைடு&oldid=3849050" இலிருந்து மீள்விக்கப்பட்டது