கோபால்ட்(II) அயோடைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II) அயோடைடு
| |
வேறு பெயர்கள்
கோபால்டசயோடைடு, கோபால்ட் ஈரயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
(அறுநீரேற்று: 52595-03-6) 15238-00-3 (அறுநீரேற்று: 52595-03-6) | |
பப்கெம் | 419951 |
பண்புகள் | |
CoI2 | |
வாய்ப்பாட்டு எடை | 312.7421 கி/மோல் (நீரிலி) 420.83 கி/மோல் (அறுநீரேற்று) |
தோற்றம் | α-வடிவம்: கருப்பு அறுகோணப் படிகங்கள் β-வடிவம்: மஞ்சள்நிறத் துகள் |
அடர்த்தி | α-வடிவம்: 5.584 கி/செ.மீ3 β-வடிவம்: 5.45 கி/செ.மீ3 அறுநீரேற்று: 2.79 கி/செ.மீ3 |
உருகுநிலை | α-வடிவம்: 515-520 °செ (வெற்றிடத்தில்) β-வடிவம்: 400 °செல்சியசில் α- வடிவமாக மாறுகிறது. |
கொதிநிலை | 570 °C (1,058 °F; 843 K) |
67.0 கி/100 மி.லி[1] | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | தீங்கு (Xn) |
R-சொற்றொடர்கள் | R20/21/22, R36/37/38 |
S-சொற்றொடர்கள் | S26, S36[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | கோபால்ட்(II) புளோரைடு கோபால்ட்(II) குளோரைடு கோபால்ட்(II) புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | நிக்கல்(II) அயோடைடு தாமிரம்(I) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கோபால்ட்(II) அயோடைடு அல்லது கோபால்டசயோடைடு (Cobalt(II) iodide or cobaltous iodide ) என்பது CoI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். CoI2 சேர்மத்தின் இரண்டு அமைப்பிலான வடிவங்கள் மற்றும் அறுநீரேற்று வடிவம், CoI2(H2O)6 ஆகியன கோபால்ட்டின் முக்கியமான அயோடைடுகளாகும்[3].
தயாரிப்பு மற்றும் அமைப்பு
[தொகு]கோபால்ட் தூளுடன் வாயுநிலை ஐதரசன் அயோடைடு சேர்த்து சூடுபடுத்துவதால் கோபால்ட்(II) அயோடைடு தயாரிக்கப்படுகிறது. கோபால்ட்(II) ஆக்சைடுடன் அல்லது தொடர்புடைய கோபால்ட் சேர்மங்களுடன் ஐதரயோடிக் அமிலத்தைச்[3] சேர்த்து வினைப்படுத்துவதால் நீரேற்று வடிவ கோபால்ட்(II) அயோடைடு தயாரிக்கப்படுகிறது.
α- மற்றும் β- அமைப்புகள் என்ற இரண்டு பல்லுருவ அமைப்புகளில் கோபால்ட்(II) அயோடைடு படிகமாகிறது.α பல்லுருவ அமைப்பில் உள்ள கோபால்ட்(II) அயோடைடின் கருப்புநிற அறுகோணப் படிகங்கள் காற்றில் படநேர்ந்தால் அடர்பச்சை நிறத்திற்கு மாறுகிறது. α-CoI2 சேர்மத்தை வெற்றிடத்தில் 500 ° செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதால் பதங்கமாதல் நிகழ்ந்து β-பல்லுருவ அமைப்பு கோபால்ட்(II) அயோடை சேர்மம் மஞ்சள் நிறத்தில் உருவாகிறது. இச்சேர்மமும் காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி பச்சை நிறத்திற்கு மாறுகிறது. β-பல்லுருவ அமைப்பை 400 ° செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதால் α-CoI2 உருவாகிறது[3]
அறுநீரேற்று வடிவ கோபால்ட் (II) அயோடைடானது [Co(H2O)6]2+ மற்றும் அயோடைடு அயனி என்ற தனித்தனி கூறுகளாக காணப்படுவதை படிகவுருவியல் முடிவுகள் தெரிவிக்கின்றன[4][5].
வினைகள் மற்றும் பயன்கள்
[தொகு]பல்வேறு கரைப்பான்களில் உள்ள நீரைக் கண்டறியும் சோதனையில் நீரிலி வடிவ கோபால்ட் (II) அயோடைடு சிலசமயங்களில் பயன்படுத்தப்படுகிறது[6]. கார்பனைலேற்றம் போன்ற வினைகளில் கோபால்ட் (II) அயோடைடு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையில் இருகீட்டீனுடன் கிரிக்னார்டு கரணி வினைபுரியும் போது இது வினையூக்கியாகச் செயல்பட்டு தெர்பினாய்டுகளை உருவாக்குகிறது[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Perry, Dale L.; Phillips, Sidney L. (1995), Handbook of Inorganic Compounds, San Diego: CRC Press, pp. 127–8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8671-3, பார்க்கப்பட்ட நாள் 2008-06-03
- ↑ "429740 Cobalt(II) iodide anhydrous, beads, −10 mesh, 99.999%". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.
- ↑ 3.0 3.1 3.2 O. Glemser "Cobalt, Nickel" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1518.
- ↑ “Structure Cristalline et Expansion Thermique de L’Iodure de Nickel Hexahydrate“ (Crystal structure and thermal expansion of nickel(II) iodide hexahydrate) Louër, Michele; Grandjean, Daniel; Weigel, Dominique Journal of Solid State Chemistry (1973), 7(2), 222-8. எஆசு:10.1016/0022-4596(73)90157-6 10.1016/0022-4596(73)90157-6
- ↑ "The crystal structure of the crystalline hydrates of transition metal salts. The structure of CoI2·6H2O" Shchukarev, S. A.; Stroganov, E. V.; Andreev, S. N.; Purvinskii, O. F. Zhurnal Strukturnoi Khimii 1963, vol. 4, pp. 63-6.
- ↑ Armarego, Wilfred L. F.; Chai, Christina L. L. (2003), Purification of Laboratory Chemicals, Butterworth-Heinemann, p. 26, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-7571-3, பார்க்கப்பட்ட நாள் 2008-06-03
- ↑ Agreda, V. H.; Zoeller, Joseph R. (1992), Acetic Acid and Its Derivatives, CRC Press, p. 74, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-8792-7, பார்க்கப்பட்ட நாள் 2008-06-03