உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம்

ஆள்கூறுகள்: 25°27′N 81°51′E / 25.45°N 81.85°E / 25.45; 81.85
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணம்
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்கள் பிரித்தானிய இந்தியா

1902–1937 [[ஐக்கிய மாகாணம்|]]
Location of ஐக்கிய மாகாணங்கள்
Location of ஐக்கிய மாகாணங்கள்
ஐக்கிய மாகாணங்களின் வரைபடம், 1909
தலைநகரம் அலகாபாத்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1902
 •  Disestablished 1937
தற்காலத்தில் அங்கம் உத்தரப் பிரதேசம் & உத்தரகண்ட்

ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணம் (United Provinces of Agra and Oudh), பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் ஆக்ரா மாகாணம் மற்றும் அயோத்தி பிரதேசங்களைக் கொண்டு இம்மாகாணம் 1902 முதல் 1937 முடிய செயல்பட்டது. பின்னர் ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணத்தை 1937ல் புதிதாக நிறுவப்பட்ட ஐக்கிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.[1]

அயோத்தி மற்றும் ஆக்ரா மாகாணங்களை ஒன்றிணைத்து ஆக்ரா மற்றும் அயோத்தி ஐக்கிய மாகாணம் 1902ல் உருவாக்கப்பட்டது. ஐக்கிய மாகாணத்தின் தலைநகராக அலகாபாத் நகரம் விளங்கியது. [2] [3]

புவியியல்

[தொகு]

1,07,164 சதுர மைல் பரப்பளவு கொண்ட ஆக்ரா & அயோத்தி ஐக்கிய மாகாணத்தின் வடக்கில் திபெத், வடகிழக்கில் நேபாளம், கிழக்கில் பிகார், தெற்கில் தற்கால மத்தியப் பிரதேசமும், மேற்கில் பஞ்சாப் மாகாணமும் எல்லைகளாகக் கொண்டது. [4]இம்மாகாணத்தில் வற்றாத கங்கை ஆறு மற்றும் யமுனை ஆறுகள் பாய்கிறது.

நிர்வாகக் கோட்டங்கள்

[தொகு]

பிரித்தானியாவின் இந்திய அரசு ஆக்ரா & அயோத்தி ஐக்கிய மாகாணத்தை நிர்வகிக்க, ஐக்கிய மாகாணத்தை 9 வருவாய் கோட்டங்களாகவும், 48 மாவட்டங்களாகவும் பிரித்தனர்.[5]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. United Provinces Of Agra And Oud
  2. Ashutosh Joshi (1 Jan 2008). Town Planning Regeneration of Cities. New India Publishing. p. 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8189422820.
  3. Kerry Ward. Networks of Empire: Forced Migration in the Dutch East India Company. Cambridge University Press. p. 340. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-88586-7. பார்க்கப்பட்ட நாள் 3 August 2012.
  4. United Provinces of ஆக்ரா and Oudh – United Provinces of Agra and Oudh
  5. United Province of Agra and Oudh

மேலும் படிக்க

[தொகு]