கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூர்க் மாகாணம் அல்லது குடகு மாகாணம் (Coorg Province) என்பது தற்கால கர்நாடகா மாநிலத்தின் குடகு மாவட்டப் பகுதிகளைக் கொண்ட குடகு இராச்சியமாக இருந்தது. 1834-இல் நடைபெற்ற குடகுப் போருக்குப் பின்னர் ஆங்கிலேயரகளின் பிரித்தானிய இந்தியாவின் ஒரு மாகாணமாக 1834 முதல் 1947 முடிய இருந்தது. குடகு மாகாணத்தின் தலைநகராக மடிக்கேரி நகரம் இருந்தது. குடகு மாகாணத்தின் குடகு மலையில் வாழும் மக்களின் மொழி குடகு மொழி ஆகும். குடகு மாகாணம் காபித் தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. ஆகஸ்டு 1947-க்குப் பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் குடகு மாகாணம், குடகு மாநிலமாக இந்திய ஒன்றியத்தின் கீழ் 1950 வரை இருந்தது. 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, குடகு மாநிலம் அருகில் இருந்த கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
மக்கள்தொகை வளர்ச்சிஆண்டு | ம.தொ. | ±% |
---|
1871 | 1,68,312 | — |
---|
1881 | 1,78,302 | +5.9% |
---|
1891 | 1,73,055 | −2.9% |
---|
1901 | 1,80,607 | +4.4% |
---|
1911 | 1,74,976 | −3.1% |
---|
1921 | 1,63,838 | −6.4% |
---|
1931 | 1,63,327 | −0.3% |
---|
1941 | 1,68,726 | +3.3% |
---|
குடகு மாகாணத்தின் சமயம் (1871 மக்கட்தொகை கணக்கெடுப்பு) |
சமயம் |
|
% |
இந்துக்கள் |
|
91.6% |
இசுலாமியர் |
|
6.7% |
கிறித்தவர் |
|
1.4% |
சமணர் |
|
0.3% |
குடகு மாகாணம் காபி, தேயிலை மற்றும் இரப்பர் பணத்தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. மேலும் குடகு சமவெளிகளில் நெல் சாகுபடி செய்யப்படுகிறாது.