உள்ளடக்கத்துக்குச் செல்

புந்தேல்கண்ட் முகமை

ஆள்கூறுகள்: 25°03′N 79°26′E / 25.05°N 79.43°E / 25.05; 79.43
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
புந்தேல்கண்ட் முகமை
பிரித்தானிய இந்தியாவின் முகமை
1811–1948
Location of
Location of
மத்திய இந்திய முகமை வரைபடத்தில் புந்தேல்கண்ட் முகமை (மஞ்சள் நிறத்தில்)
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1811
 •  இந்திய விடுதலை 1948
பரப்பு
 •  1901 25,510 km2 (9,849 sq mi)
Population
 •  1901 13,08,326 
மக்கள்தொகை அடர்த்தி 51.3 /km2  (132.8 /sq mi)
 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Bundelkhand". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

புந்தேல்கண்ட் முகமை (Bundelkhand Agency) பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்களுக்கு கீழிருந்த சுதேச சமஸ்தானங்களை காண்காணிக்கவும், ஆண்டுதோறும் திறை வசூலிக்கவும் நிறுவப்பட்ட முகமைகளில் ஒன்றாகும். புந்தேல்கண்ட் முகமையின் பிரித்தானிய அரசியல் முகவர், புந்தேல்கண்ட் பகுதியில் இருந்த சுதேச சமஸ்தானங்களை 1811-ஆம் ஆண்டு முதல் 15 ஆகஸ்டு 1947 வரை நிர்வகித்தார். [1] 1901-ஆம் ஆண்டில் புந்தேல்கண்ட் முகமை 25,510 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 13,08,326 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.

வரலாறு

[தொகு]

பேஷ்வாகளின் தலைமையிலான மராத்தியப் பேரரசு 18-ஆம் நூற்றாண்டில் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள சிறிய இராச்சியங்களை வென்று, தங்களுக்கு கீழ்படிந்த சிற்றரசுகளாக வைத்துக்கொண்டனர்.மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் புந்தேல்கண்ட் பகுதியின் ஆட்சியாளர்கள், 1818-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்று, ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானங்களாக ஆட்சி செய்தனர். புந்தேல்கண்ட் ஐக்கிய மாகாணத்தின் கீழ் செயல்பட்டது. புந்தேல்கண்ட் பகுதி சுதேச மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

சுதேச சமஸ்தானங்கள்

[தொகு]

புந்தேல்கண்ட் முகமையின் கிழக்கில் பகேல்கண்ட், வடக்கில் ஐக்கிய மாகாணம் இருந்தது.

  1. ததியா சமஸ்தானம், 15 குண்டு மரியாதை
  2. ஓர்ச்சா சமஸ்தானம்[2] 15 குண்டு மரியாதை
  3. அஜய்கர் சமஸ்தானம், 11 குண்டு மரியாதை
  4. பாவனி சமஸ்தானம், 11 குண்டு மரியாதை
  5. பிஜாவர் சமஸ்தானம், 11 குண்டு மரியாதை
  6. சர்க்காரி சமஸ்தானம், 11 குண்டு மரியாதை
  7. பன்னா சமஸ்தானம், 11 குண்டு மரியாதை
  8. சம்தர் சமஸ்தானம், 11 குண்டு மரியாதை
  9. சத்தர்பூர் சமஸ்தானம், 11 குண்டு மரியாதை

குண்டு மரியாதையில்லா சுதேச சமஸ்தானங்கள்

[தொகு]
  1. அலியாபுரா சமஸ்தானம்
  2. பேரி சமஸ்தானம்
  3. பிகாத் சமஸ்தானம்
  4. கரௌலி சமஸ்தானம்
  5. கௌரிகர் சமஸ்தானம்
  6. ஜிக்னி சமஸ்தானம்
  7. லுகாசி சமஸ்தானம்
  8. நய்க்வான் ரெபாய் சமஸ்தானம்
  9. சரிலா சமஸ்தானம்

ஜாகீர் அல்லது ஜமீன்தார்கள்

[தொகு]
  1. பங்கா-பகாரி ஜமீன்
  2. பிஜ்னா ஜமீன் (Bijna State|Bijna)
  3. பில்ஹெர் ஜாகீர்
  4. தூர்வாய் ஜமீன்
  5. தோரி பதேபுரி ஜாகீர்
  6. ஹன்சரி ஜமீன்
  7. கேதேரா ஜமீன்

அவகாசியிலிக் கொள்கை படி பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்ட முன்னாள் இந்திய மன்னராட்சிகள்

[தொகு]

பிரித்தானிய தலைமை ஆளுநர் டல்ஹவுசி பிரபு கொண்டு வந்த அவகாசியிலிக் கொள்கையின் படி, வாரிசுரிமை அற்ற இராச்சியங்களை வலுக்கட்டாயமாக பிரித்தானிய இந்தியாவுடன் இணக்கப்பட்டது.

  1. ஜாலௌன் இராச்சியம், இணக்கப்பட்ட ஆண்டு 1840
  2. ஜான்சி இராச்சியம், 1853
  3. ஜெயித்பூர் இராச்சியம், 1849
  4. கட்டி
  5. சிர்கோன்
  6. பூர்வா ஜாகீர் (Purwa)
  7. பிஜ்ஜெராகோகார் (Bijeraghogarh)
  8. திரோஹா (Tiroha)
  9. ஷாகர் (Shahgarh), 1857
  10. பன்பூர் (Banpur), 1857, [3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bundelkhand Agency". The Imperial Gazetteer of India, Vol. 9. Oxford at Clarendon Press. 1909. pp. 74–77.
  2. Orchha state The Imperial Gazetteer of India, 1909, v. 19, p. 241.
  3. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908



"https://ta.wikipedia.org/w/index.php?title=புந்தேல்கண்ட்_முகமை&oldid=3388357" இலிருந்து மீள்விக்கப்பட்டது