உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய இந்திய முகமை

ஆள்கூறுகள்: 26°13′N 78°10′E / 26.22°N 78.17°E / 26.22; 78.17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய இந்திய முகமை
பிரித்தானிய இந்தியாவின் அரசியல் முகமை
[[மால்வா முகமை|]]
1854–1947 [[குவாலியர் முகமை|]]
 
[[மத்திய பாரதம்|]]
 
[[போபால் அரசு (1949–56)|]]
 
[[விந்தியப் பிரதேசம்|]]
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of Central India Agency
Location of Central India Agency
1909-ஆம் ஆண்டில் மத்திய இந்திய முகமையின் வரைபடம்
வரலாறு
 •  பிரித்தானிய இந்திய அரசியல் முகமைகள் இணைக்கப்பட்டது. 1854
 •  1947 இந்திய விடுதலை 1947
பரப்பு
 •  1881 1,94,000 km2 (74,904 sq mi)
Population
 •  1881 92,61,907 
மக்கள்தொகை அடர்த்தி 47.7 /km2  (123.7 /sq mi)
 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Central India". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
தார் சமஸ்தானத்தில் மத்திய இந்திய முகமையின் அலுவலக வளாகம்

மத்திய இந்திய முகமை (Central India Agency) பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். 1854-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த முகமையின் தலைமையிடம் இந்தூர் நகரம் ஆகும். 1881-ஆம் ஆண்டில் இம்முகமை 1,94,000 சதுர கிலோ மீட்டர் (74,904 சதுர மைல்) பரப்பளவும், 92,61,907 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.

இம்முகமை மத்திய இந்தியாவில் உள்ள சுதேச சமஸ்தானங்களின் ஆட்சி அரசியலை மேற்பார்வையிடுவதுடன், ஆண்டு தோறும் சுதேச சமஸ்தானங்களிடமிருந்து திறை வசூலிப்பதாகும். இம்முகமையின் நிர்வாகி, பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநரின் கீழ் செயல்படுவார்.

மத்திய இந்திய முகமையின் கீழ் உள்ள சிறிய முகமைகள்

[தொகு]
  1. புந்தேல்கண்ட் முகமை
  2. பகேல்கண்ட் முகமை
  3. குவாலியர் முகமை
  4. மால்வா முகமை
  5. போபால் முகமை
  6. இந்தூர் முகமை
  7. போபவார் முகமை

இந்திய விடுதலைக்குப் பின்னர்

[தொகு]

1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் மத்திய இந்திய முகமை கலைக்கப்பட்டது. 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி, மத்திய இந்திய முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. புந்தேல்கண்ட் முகமை மற்றும் பகேல்கண்ட் முகமையின் பகுதிகள் புதிதாக நிறுவப்பட்ட விந்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மால்வா முகமை, குவாலியர் முகமை மற்றும் இந்தூர் முகமைகளை புதிதாக நிறுவப்பட்ட மத்திய பாரதம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. போபால் முகமையை மட்டும் போபால் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, விந்தியப் பிரதேசம் மற்றும் மத்திய பாரதம் பகுதிகளை, புதிதாக நிறுவப்பட்ட மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து, 1 நவம்பர் 2000 அன்று சத்தீசுகர் மாநிலம் உருவாக்கப்பட்டது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  • Hunter, William Wilson, Sir, et al. (1908). Imperial Gazetteer of India, Volume 12. 1908–1931; Clarendon Press, Oxford.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_இந்திய_முகமை&oldid=3388352" இலிருந்து மீள்விக்கப்பட்டது