போபால் முகமை
Warning: Value not specified for "common_name" | |||||
போபால் முகமை | |||||
பிரித்தானிய இந்தியாவின் அரசியல் முகமை | |||||
| |||||
மத்திய இந்திய முகமையின் வரைபடத்தின் நடுவில் போபால் முகமையின் அமைவிடம் | |||||
வரலாற்றுக் காலம் | குடிமைப்பட்ட கால இந்தியா | ||||
• | நிறுவப்பட்டது | 1818 | |||
• | 1947 இந்திய விடுதலை | 1947 | |||
பரப்பு | |||||
• | 1901 | 30,181 km2 (11,653 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 11,57,697 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 38.4 /km2 (99.3 /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
போபால் முகமை (Bhopal Agency), குடிமைப்பட்ட கால இந்தியாவை ஆண்ட பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த மத்திய இந்தியாவின் சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்கவும், ஆண்டுதோறும் திறை வசூலிக்கவும் இம்முகமை 1818-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு முடிய செயல்பட்டது.[1] இதன் தலைமையிடம் போபால் நகரம் ஆகும். 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, போபால் முகமையின் மொத்த பரப்பளவு 30,181 சதுர கிலோ மீட்டர் மற்றும் மக்கள் தொகை 11,57,697 ஆகும்.
வரலாறு
[தொகு]மராத்தியப் பேரரசிற்கு எதிராக பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் ஆட்சியாளரகள் நடத்திய மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் மராத்திய பேரரசு வெற்றி வாய்ப்பை இழந்தது. எனவே மராத்தியப் பேரரசில் இருந்த சிற்றரசுகள் அனைத்தும், 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்றக்கொண்டு, ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.
இந்த சுதேச சமஸ்தானங்களை நிர்வகிக்க போபால் முகமை 1818-ஆம் ஆண்டில் போபால் முகமை நிறுவப்பட்டது. மத்திய மாகாணத்தின் தலைமை ஆணையாளரின் கீழ் போபால் முகமை செயல்பட்டது. போபால் முகமையின் கீழிருந்த சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1854-ஆம் ஆண்டு முதல் போபால் முகமை, மத்திய இந்திய முகமையின் கீழ் செயல்பட்டது.
1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் போபால் முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள், 1948-ஆம் ஆண்டில் புதிய மத்திய பாரதம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
போபால் முகமையின் கீழ் சுதேச சமஸ்தானகளும், ஜமீன்தார்களும்
[தொகு]1931 முடிய போபால் முகமையில் 9 சுதேச சமஸ்தான மன்ன்ர்களும், பல ஜமீன்தார்களும் இருந்தனர்.
பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்:
- போபால் சமஸ்தானம், 19 குண்டு மரியாதை
- நரசிங்கர் சமஸ்தானம், 11 குண்டு மரியாதை
- ராஜ்கர் சமஸ்தானம், 11 குண்டு மரியாதை
- கில்ச்சிபூர் சமஸ்தானம், 9 குண்டு மரியாதை
வணக்கமில்லா சுதேச சமஸ்தானங்கள்:
- பசோடா சமஸ்தானம்
- கோர்வாய் சமஸ்தானம்
- மக்சுதன்கர் சமஸ்தானம்
- முகமத்கர் சமஸ்தானம்
- பதரி சமஸ்தானம்
இதனையும் காண்க
[தொகு]- மராட்டியப் பேரரசு
- மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர்
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்
- மத்திய இந்திய முகமை
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- மத்திய பாரதம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.